சுடரொளி பத்திரிகையுடன் ரயிலில் கண்டிக்கு கிளம்பினார் அமைச்சர் ஹக்கீம்.


கண்டியில் நடைபெற்ற ஹோட்டல் பயிற்சிப் பாடசாலை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான ரவுப் ஹக்கீம் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயில் மூலம் பயணம் செய்தார்.
அமைச்சுப் பதவிகளில் உள்ளவர்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்கின்ற இன்றைய காலகட்டத்தில் நீதி அமைச்சரின் இந்த செயற்பாடு ஏனைய அமைச்சர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. 

ரயிலில் சுடர் ஒளி பத்திரிகையை வாசித்தவாறே பயணம் செய்தார் என்பதும் விசேட அம்சமாகும்.

கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரயிலில்தான் பிரயாணங்களை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அந்த நிலைமை மாறிவிட்டது. மக்களுக்குச் சேவை செய்யப்புறப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எரிபொருள் செலவுக்காக மாதமொன்று லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹூம் டாக்டர் ஜலால்தீன் கூடுதலாக தனது பயணத்தை கொழும்புக்கு ரயிலில்தான் மேற்கொண்டுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.

அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்து கொண்ட இத்திறப்பு விழாவில் நீதி அமைச்சரின் ரயில் பயணத்தை எல்லோரும் சிலாகித்துப் பேசியதோடு, இந்த முன்மாதிரியை நாமும் பின்பற்ற வேண்டும் எனவும் பேசிக்கொண்டனர்.
அமைச்சின் ஊடகப்பிரிவு இம்போட்மிரர் இணையத்துக்கு அனுப்பிய படமும் தகவலும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :