அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மூன்று பாரிய இராணுவ முகாம்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது என மு.கா.வின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது, பொத்துவில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகம் ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு இராணுவ முகாம்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் மூலம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்குச் சொந்தமாக விருக்கும் ஆயிரக் கணக்கான காணிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்து விட்ட பிற்பாடு அராசங்கம் ஏன் இவ்வாறு பாரிய இராணுவ முகாம்களை அமைக்க வேண்டும் எனவும் ஷபீக் ரஜாப்தீன் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

0 comments :
Post a Comment