
(எம்.பைஷல் இஸ்மாயில்)
சீனாவில் ஒரு சிறுமிக்கு உடலின் பல பாகங்களில் கறுப்பு மச்சத்துடன் பூனையின் ரோமத்துடன் அதிசய பிள்ளையாக காணப்படுகிறார்.
சீனாவின் தெற்குப்பகுதியான பென்கை எனும் பகுதியில் வசித்துவரும் 7 வயது நிரம்பிய 'லை சுயவான்' என்ற சிறுமியின் முதுகு, கை, முகம் போன்ற பல பகுதிகளில் கறுப்பு மச்சம் போன்றும் பூனையின் ரோமத்துடன் உடம்பில் உள்ளது.
இது பற்றி மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், இச்சிறுமி பிறக்கும் போது உடலில் பல பாகங்களில் சிறு சிறு மச்சங்கள் காணப்பட்டது. ஆனால் இச்சிறுமியின் உடல் வளர வளர அதுவும் வளர்ந்து கொண்டு உடல் முழுவதும் பரவியுள்ளது. இந்த மச்சம் சாம்பல் நிறத்தில் காணப்படுவதுடன் ரோமங்கள் சிறியவையாகவே அது காணப்படுகிறது.
இது பற்றி குறித்த பெண் கூறுகையில், எனது உடலின் அரை வாசிக்கு இந்த மாற்றம் காணப்படுவதாகவும் இதனால் எனது நண்பர்கள் என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கு பயத்தின் காரணத்தினால் மறுக்கின்றார்கள். மேலும் எல்லா நண்பர்களும் தன்னை பூனைப்பெண் என்று தான் அழைத்து வருகின்றனர். என இந்த அதிசயச் சிறுமி தெரிவித்துள்ளார்.
இச் சிறுமியைப் போன்று சீனாவில் இன்னுமொரு சிறுவனும்
காணப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments :
Post a Comment