
வென்னப்புவ, பன்டிரிப்புவ பிரசேத்தில் இன்று (27) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றின்மேல் வேன் ஒன்று ஏறிச் சென்றதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற நிலையில் வேன் நிறுத்தாது அவ்விடத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளது. விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாண்டிரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரது சடலம் மாரவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment