இடவசதியின்றி நெற்களஞ்சியசாலையில் கின்னியா பாடசாலை; வீடியோ இணைப்பு.

(பஹ்மி யூஸூப்)

டவசதியற்ற நிலையில் வேறு கட்டடமொன்றில் இயங்கிவரும் கிண்ணியா டி.பி.ஜாயா வித்யாலயத்தின் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் 18.04.2013 புதன்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட டி.பி.ஜாயா வித்தியாலயம் கடந்த 19 வருடங்களாக நெற்களஞ்சியசாலை கட்டடமொன்றில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகின்றது. 

இந்நிலையில், அருகில் உள்ள கிண்ணியா பொது வைத்தியசாலையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர். 

தரம் 11 வரையான வகுப்புகளைக் கொண்ட டி.பி.ஜாயா வித்தியாலயத்தில் சுமார் 800ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு இட வசதியுடைய மூன்று மாடிக் கட்டடமொன்றை அமைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் கூறும்போது, டி.பி.ஜாயா வித்தியாலயத்திற்கு என வேறு பகுதியில் பகுதியளவில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பணிகளை இந்த வருடத்திற்குள் பூர்த்திசெய்வதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

மேலுமொரு புதிய கட்டடத்தை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நிதியை அடுத்த வருட பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்குவதற்கும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உறுதியளித்ததாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :