பொத்துவில் நீதிமன்றில் இருந்து கொலைக்குற்றக் கைதி தப்பியோட்டம்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

கொலை வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்று தப்பியோடியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளன.

கோமாரியைச் சேர்ந்த மகேந்திரராசா சசிகரன் என்ற கைதியை கொலை வழக்கு விசாரணைக்காக நேற்று புதன்கிழமை (17) பொத்துவில் நீதிமன்றிற்கு ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டபோதே குறித்த கைதி பொத்துவில் நீதிமன்றிலிருந்து தப்பியோடியள்ளார்.

அழைத்து வந்த சிறைச்சாலை அதிகாரியிடம் குறித்த கைதி தான் மலசலகூடம் செல்ல வேண்டுமென அதற்கான அனுமதியை பெற்றுச் சென்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை பின் தொடர்ந்தபோது அவ்வதிகாரிகளை தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியதையடுத்து பொத்துவில் பொலிஸார் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர். என மேலும் அறியக்கிடைத்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :