அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டு விழா சனிக்கிழமை.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா (20) சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர் ஏ.எல் எம் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏஅன்சீல், கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.மதிவன்னன் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்விளையாட்டு விழாவில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 38 வது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏ.ஆர்.ரஜாஸ்கான்; மற்றும் இவருக்கான ஆரம்ப பயிற்றுவிப்பாளரான அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.தாஜுதீன் ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :