மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை பார்வையிட வந்த நபரொருவர் வாழைப்பழத்தில் மறைத்து போதை பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொரளை பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.வாழைப்பழத்தினுள் சிறு குழாய் ஒன்றினை செலுத்தி அதற்குள் போதைமருந்து தூளினை செலுத்தி குறித்த பழத்தின் காம்புப்பகுதியை ஒட்டி குறித்த கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் குறித்த முயற்சியை சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் முறியடித்ததாகவும் குறித்த பழத்தினை அவர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
0 comments :
Post a Comment