முஸ்லிம்களை தோற்கடிக்க புலிப் புலம்பெயர் தமிழர்களும் அமெரிக்காவும் சதி-விக்கிலீக்ஸ்


முஸ்லிம்களை தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டுமென புலி ஆதரவு புலம்பெயர் தமிழர் கோரியதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் முஸ்லிம் பள்ளிவாசல்களும், மத நிறுவனங்களும் நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான செலவுகளை கிழக்கு மக்களினால் செய்யக் கூடிய வாய்ப்பு கிடையாது எனவும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெ
ரிவித்துள்ளனர். 

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்த நிர்மாணப் பணிகளுக்கு பணம் கிடைத்திருக்க வேண்டுமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வைஸ் இந்தக் குறிப்பை அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கியுள்ளதா என பாதுகாப்பு தரப்பினரிடம் வினவியதாகவும், பாகிஸ்தான் அல்லது அரேபியர்கள் கிழக்கிற்கு விஜயம் செய்ததாக தெரியவில்லை என பதிலளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் என்ன நடக்கின்றது என்பதனை சரியாக குறிப்பிட முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜிஹாத், ஒசாமா போன்ற சிறிய அடிப்படைவாத குழுக்கள் இயங்கி வருவதாக கேள்விபட்டோம் என படைத்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த அமைப்புக்களினால் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் என கருதவில்லை என தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதாகவும் ஆயுதங்களை ஏந்தியிருப்பதாகவும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்ளை ஒடுக்க அமெரிக்கா புலிகளுடன் இணைந்து செயற்பட வேண்டுமென, கமலதாஸ் என்ற புலி ஆதரவு தன்னார்வ தொண்டு நிறுவன செயற்பட்டாளர் அமெரிக்கத் தூதரக அதிகாரிடம் கோரியுள்ளார் என அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸ் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.JM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :