(எம்.பைஷல் இஸ்மாயில்)செங்கலடியில் நேற்று நள்ளிரவு
தம்பதிகள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி விப்ரா பென்சி கோணர் உரிமையாளரும் அவரது மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட சிவகுரு ரகு, ரகு விப்ரா ஆகிய கனவன் மனைவி இருவருமே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பதுளை வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு வருகை தந்த இனம் தெரியாத குழுவினர் இவர்களை தாக்கியள்ளனர்.
இத்தாக்குதலின் போது தாலையிலும், கழுத்திலும் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வெட்டிய நிலைமையில் உள்ளன. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரின் உயிர் பிரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலைச் சம்பவம் செங்கலடி மக்களை மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment