இந்த ஏழைச்சிறுமிக்கு உதவ முடிந்தால் உதவுங்கள்.

காத்தான்குடியின் அயல் கிராமமான காங்யேனோடை பதுர் பள்ளி வீதியில் வதியும் அமீன் ஸா்மிலா என்பவர்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த பாத்திமா நிஷா, பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரம் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த இந்த ஏழை சிறுமி, தற்போது 5 வயதினை அடைந்த நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பாரிய நோய் காரணமாக வைத்தியம் செய்ய வசதியின்றி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.

சிரித்துக் கொண்டே இருக்கும் பாத்திமா நிஷா தினம் தினம் நோயால் அவதியுருவதனை நேரினில் பார்ப்பவா்களுக்கு இச்சிறுமியின் யதார்த்த நிலை புரியும்.

அவசரமாக சத்திர சிகிச்சை செய்வதற்கு ஆரம்பமாக ரூபா-175,000/= தேவைப்படுவதாகவும் அதன்பின்னரான செலவுகள் வேறு எனவும் அழுதவாறு எம்மிடம் தெரிவித்தார் பாத்திமா நிஷா வின் ஏழைத்தாய் ஸா்மிலா.

அன்பானவா்களே! இறைவனின் திருப்தியை மாத்திரம் நாடியவா்களாக உங்களின் சம்பாத்தியத்திலிருந்து ஆகக் குறைந்தது ஒரு ஆயிரம் ரூபாய் மட்டுமாவது அனுப்பி இந்த ஏழைச்சிறுமியின் சுக வாழ்வுக்காக உதவுங்கள்.

இந்த ஏழைக் குடும்பத்தின் பிரா்த்தனை நிச்சயமாக உங்களுக்கும் உண்டு.

MR. M.AMEEN,
A/C-NO-73521134,
BANK OF CEYLON
ARAYANPATHY-KATTANKUDY
SRI LANKA. 

Phone- 077-9536677 / 077-1384815.

இது ஒரு உதவியாக நினைத்து பிரசுரிக்கிறோம் இதனைப்பார்ப்பவர்கள் மேலதிக விபரம் அறிந்து இந்த ஏழைச்சிறுமிக்கு உதவலாம் ஒவ்வொரு ஒரு ரூபாய் உதவிகளும் மறுமையில் நற்சாட்சி சொல்லும் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :