இலங்கையில் சுற்றுலா பயணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை.

லங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய விதிகள் தொடர்பில் ஹோட்டல் தொழிற்துறை சார்ந்தவர்கள் பலதரப்பட்டக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். 

இலங்கையில் ஒரு வாரத்துக்கு அதிககாலம் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா மற்றும் கடவுச்சீட்டுத் தகவல்களை ஹோட்டல்களும் விருந்தினர்-ஓய்வு விடுதிகளும் அரசாங்கத்திடம் வழங்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பதற்கும் விடுமுறையை கழிப்பவர்கள் என்ற போர்வையில் இருப்போரால் புரியப்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. 

இப்படியான மேலதிக கண்காணிப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று இலங்கையில் ஹோட்டல்களை நடத்துவோரில் சிலர் கூறுகின்றனர். 

ஆனால் இப்படியான கட்டுப்பாடுகளால் வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு வரத் தயங்குவார்கள் என்று ஹோட்டல் தொழிற்துறை சார்ந்த மேலும் பலர் தெரிவித்தனர். 

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் வீசாக் கட்டணம் அறவிடும் நடைமுறையை 2011-ம் ஆண்டில் அரசாங்கம் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :