இலங்கை பற்றி தகவல் சேகரித்த தாய்லாந்து பிக்கு கைது.

லங்கை பற்றி தகவல் சேகரித்த தாய்லாந்து நாட்டு புத்த பிக்கு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்து பேங்கொக் நகரை சேர்ந்தவர் பி.ஜே.எமுராய் என்ற புத்த பிக்குவான இவர் ஔரெங்காபாத்தில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் புத்தம் பார்சி மதங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஔரெங்காபாத்தில் இருந்து இன்று காலை ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். எமுராய், ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ சாரதியிடம் இங்கிருந்து இலங்கை எவ்வளவு தூரம். எப்படி அங்கு போகலாம் என இலங்கை பற்றி விசாரித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ சாரதி இலங்கைக்கு இங்கிருந்து போக முடியாது. ரயிலில் சென்னை சென்று அங்கிருந்து செல்லலாம் என சொல்லி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

ரயில் நிலையத்தில் புத்த பிக்கு நின்று கொண்டிருப்பதை கண்ட ரயில்வே பொலிஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆராய்ச்சி மாணவர் என்பது உறுதியானது.

ஏற்கனவே இலங்கையில் இருந்து சுற்றுலா வருபவர்கள், புத்த பிக்குகள் மீது தாக்குதல்கள் நடந்ததை கருதி எமுராயை பொலிஸ் நிலையத்திலேயே தங்க வைத்துள்ளனர். இன்று மாலை சென்னை செல்லும் ரயிலில் அவரை அனுப்பி வைக்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :