ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6-ந்தேதி விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்ட 30 மீனவர்களின் சிறைக்காவல் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட பல்வேறு மீனவ சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக மீனவர் சங்க தலைவர்கள் சேசு ராஜா, எம்ரிட் ஆகியோர் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, 22-ம் தேதி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பின்னரும் விடுதலை செய்யாவிட்டால் 27-ம்தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
0 comments :
Post a Comment