செங்கலடி இரட்டைக்கொலை தொடர்பாக பொலிசாரின் அறிக்கை கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
“பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்” என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார். இந்த நேரம் ரகுவின் வீட்டு நாய் குசினி கதவருகில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. தலக்ஷனா நாயை கட்டுப்படுத்தியுள்ளார்.
கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்;கப்பட்டிருந்தன.
இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வர்த்தகரின் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வௌ;வேறு இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது.
தலக்ஷனா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்
நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்;டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.





0 comments :
Post a Comment