பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் திவிநெகும திட்டத்தில் புதுவருடத்தில் பழமரக் கன்றுகள் நடும் திட்டத்தில் பொது மக்களுக்கு பழமரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றது. கிராம சேவகர் பிரிவில் இரு நூறு (200) பயனாளிகளுக்கு மாமரக் கன்றுகள் வீதம் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்தி இருநூறு (1200) மாமரக் கன்றுகள் வினியோகிக்கப்பட்டன.
இதில் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு மற்றும் மீறாவோடை கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாமரக்கன்றுகள் வினியோகிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள பட்டதாரி பயிலுனர்களான எம்.எஸ்.நவாஸ், எம்.எம்.அஸ்பர், எம்.ஐ.சம்ரியா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.

0 comments :
Post a Comment