ஹலாலை ஒரு போதும் தடைசெய்ய சொல்லவில்லை -பிரிட்டனிடம் பொதுபல சேனா

நாம் ஹலாலை தடை செய்ய வேண்டும் என்று  ஒரு போதும் கேட்கவில்லை-பொதுபல சேனா பிரிட்டனிடம் முறையிடு? 

சிறுபான்மையின சமயத்தவர்களுக்கு எதிராக பொது பல சேன பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது எனக் கூறும் இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கை தொடர்பில் பிரித்தானிய அரசா


ங்கத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என பொது பல சேன தெரிவித்துள்ளது.

பொது பல சேன ஒரு இராணுவம் அல்ல. இது ஒரு வாண்மைத்துவ நிறுவனம் என அந்த அமைப்பின் பேச்சாளரான டிலந்த விதானகே தெரிவித்தார்.

“நாம் ஒரு சமய பிரிவினருக்கு எதிராக 2012ஆம் ஆண்டில் பிரச்சாரம் செய்தோம் என்பதை உறுதியாக மறுக்கின்றோம். ஆனால் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட ஹலால் சான்றுகள் தொடர்பாக இரண்டு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தினோம்” என அவர் குறிப்பிட்டார்.

“அதில் பௌத்தர்கள் ஹலால் இலச்சினை உள்ள பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என கேட்டோம். இது பிரித்தானியாவிலும் நடைபெறுவதுதான்” என டிலந்த விதானகே தெரிவித்தார்.

நாம் ஹலாலை தடை செய்ய வேண்டும் என ஒருபோதும் கேட்கவில்லை. அது முஸ்லிம்களின் உரிமை என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :