கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பண்டிகை காலத்தில் இடம்பெற்ற விபத்துக்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் நான்கு வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விபத்துக்களுக்குள்ளான 256 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 130 பேர் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தேசிய வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
வாகன விபத்துக்களில் காயமடைந்த 45 பேரும், குடிபோதை காரணமாக பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும், பட்டாசு கொளுத்தும் போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டுபேரும் இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment