இறக்காமம் பி.ச.விரட்டப்படும் உத்தியோகத்தர்களும் ஒதுக்கப்படும் உறுப்பினர்களும்.


இறக்காமம் செய்தியாளர் சஜாத்.
லத்த பாதுகாப்புக்கு மத்தியில் இறக்காமம் பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் எம்.ஐ.நைஷர் தலமையில் நேற்று ஆரம்பமானது.

சபை ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்தில் குறை நிரப்பு விவாதம் சபைக்கு கொண்டுவரப்பட்டபோது சென்ற மாத கூட்டத்தொடர் அறிக்கை வாசிப்பும் வரவு செலவு திட்டமும் சபையில் சமர்பிக்கப்பட்டது.

அதன் போது சென்ற மாதம் நிறைவேற்றப்படாத சில விடையங்கள் சுயமாகத் தயாரிக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்தமையால் சபையில் உறுப்பினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது உபதவிசாளர் ஜபீர் மெளலவி  உரை நிகழ்த்த ஆரம்பித்தார்:

குறை நிரப்பு, வரவு செலவு திட்டமானது சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர்ந்த நான்கு வேலை நாட்களுக்கு முன்பு சபை உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட பிரதிகள் அனுப்பப் பட
வேண்டியது உள்ளூராட்சி சபையினுடைய சட்டமும் காட்டாயமுமாகும்.

அவ்வாறு எது வித முன்னறிவிப்புமின்றி கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது சரியானது இல்லை என்று உப தவிசாளர் தனதுரையில் கூறினார்.
அதன்போது சபை அமர்வினைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதேச சபையில் பணிபுரியும் ஒரு உத்தியோகத்தரை தவிசாளர் தாக்க முற்பட்டதகவும், மற்றொருவர் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்ததாகவும் அக்கரைப்பற்றில் பொலிசில் புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளன மேலதிக தகவல் பின்னர் தரப்படும்.

இறக்காமம் பிரதேச சபையில் நடப்பது என்ன இது சம்மந்தமாக தவிசாளரை இம்போட் மிரர் தொடர்புகொண்டு கேட்டபோது இது சம்மந்தமாக உண்மைகள் எதுவும் இல்லை என்றும் மேலதிக விபர்த்துக்கு இம்போட் வானொலியின் அரசியல் களம் நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுக்கு முன் தெரிவிப்பேன் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :