வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகத்தின் 17 ஆவது பட்டமளிப்பு விழா


(எம்.பைஷல் இஸ்மாயில்)

ந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகத்தின் 17 ஆவது பட்டமளிப்பு விழா (20,21) சனி, ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு நிகழ்வை ஐந்து அமர்வுகளாக பிரித்து நடைபெறவுள்ளது.

இதில் விவசாய, கலை மற்றும் கலாசார, வியாபார முகாமைத்துவம், விஞ்ஞான, சௌக்கிய பராமரிப்பு உள்ளிட்ட 7 பீடங்களைச் சேர்ந்த 912 பேர் பட்டம் பெறவுள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது கௌரவ கலாநிதி பட்டத்தை முன்னாள் நீதி அமைச்சர் அமரர் கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகத்துக்கு வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிழக்கு பல்கலைக் கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் முதலாவதாக கற்கைகளை முடித்து வெளியேறும் 27 பேருக்கும் பட்டம் வழங்கப்படுகிறது.

அத்துடன் பட்ட மேல் கற்கைகளான முது கலைமாணி, வியாபார முகாமைத்துவம், கல்வி டிப்ளோமா உள்ளிட்ட கற்கைகளை முடித்துக் கொண்ட 171 பேருக்கும் இன்றைய தினம் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :