(எம்.பைஷல் இஸ்மாயில்)தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) இம்முறை மே தினக் கூட்டத்தை அட்டாளைச்சேனையில் நடாத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளை மேற்கொண்டு வருவதாக அமைப்பின் செயலாளர்
ஜூல்பிகா செரீப் தெரிவித்தார்.
இந்த மே தின விழா நுஜா அமைப்பின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மே முதலாம் திகதி காலை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முன்னால் ஆரம்பமாகும் மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் பேரணியாக அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டறவுச் சங்க கூட்ட மண்டபத்தை சென்றடைந்ததும் இந்த மே தினக் கூட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தினக் கூட்டம் 'ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வோம்'; எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக மட்டத் தலைவர்கள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் மூத்த ஊடகவியலாளரும், ஊடகத் தொழிற்சங்க வாதியுமான கலாபூசணம் மீரா எஸ். இஸ்ஸதீன் பொண்னாடை போர்த்தி பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார்.
0 comments :
Post a Comment