பிரதேச செயலக ஊழியர்களுக்கான சமூக ஒருங்கிணைப்பு செயலமர்வு.


























மூக மட்டத்தில் தற்போது காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், தாழ்வு மனப்பான்மை, சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார நெருக்கடி, பாலியல் ரீதியான பிரச்சினைகள், சமூக கலாச்சாரங்கள் போன்றவற்றால் எழுகின்ற பிரச்சினைகள் அதற்குத் தீர்வுகாணுதல், 

சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களையிட்டு நாவிதன்வெளி, இறக்காமம் ஆகிய பிரதேச செயலக ஊழியர்கள், கிராம சேவகர்கள், உள்ளுர் சமூக நல்லிணக்கக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர்களுக்கான இருநாள் பயிற்சிச் செயலமர்வுசம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் ஜேர்மன் தொழினுட்ப கூட்டுழைப்பு நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றது.

 இவ்விரு நாள் செயலர்வின்போது சமுகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை எவ்வாறு அனுகுதல், அவற்றிற்கு தீர்வு காணுதல் போன்ற பயிற்சிகள், ஒளிப்படக் காட்சிகள், கலந்துரையால்கள், சமூகங்களுக்கிடையே நடைபெறும் பிரச்சினைகளை நாடகம் மூலமாக நடித்துக் காட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் இடம்பெற்றது. ஜிஐசட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திரு. ஆர். சிவதர்சன் இந்நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி நடாத்தினார். வளவாளராக ஜனாப். எம்.என்.எம்.இம்றான் கலந்துகொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :