ஆசாத் சாலி ஊடகங்களில் அடிக்கடி ACJU வை விமர்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும்.



லங்கை வாழ் முஸ்லிம்களுக்கு

ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினை விடயத்தில் நேரடியாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு ஜமாஅத்தாக இயங்குபவர்களில் உலக ஆதாயங்களை அறவே எதிர்பார்க்காது இதய சுத்தியோடு ஈடுபடுகின்ற ஒரே அமைப்பு ACJU தான். 

ஆளும் கட்சியை எதிர்த்து சவால் விட்டுக் கொண்டும்,அடிக்கடி அறிக்கைகள் விட்டுக் கொண்டும் உரிமைக்காகப் போராடுவது அசாத் சாலி போன்றோருக்கும் ஏனைய அரசியல் வாதிகளுக்கும் தான் பொருந்தும். கட்டாயம் அவ்வாறு அசாத் சாலி போன்று துணிச்சலாக பேசுபவர்களும் சமூகத்துக்கு தேவை தான

அதனையிட்டு அவரை பாராட்டவும் வேண்டும். அதற்காக ACJU வையும் அசாத் சாலி போராடுவது போன்றோ, அல்லது சில இனவாத கட்சிகளில் அங்கம் வகிக்கும் பிக்குகள் நடந்து கொள்வது போன்றோ களத்தில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என எதிர் பார்ப்பது முட்டாள் தனம்.

உலமாக்களை பொறுத்த வரை ஆத்மீகம் உள்ளிட்ட பல விடயங்களில் மக்களை நேர்வழிப் படுத்தும் கடப்பாடு உள்ளவர்கள் அவர்கள். நாளை மிம்பர் படியை அவர்கள் மிதிக்கும் போது மக்கள் அவர்களை கண்ணியமாக ஏற்க வேண்டும்.


அவர்கள் உணர்ச்சிவசப்பட்டோ, அதிரடி நடவடிக்கைகளில் ஈடு பட்டோ சமூகத்தில் தமக்கு இருக்கின்ற கண்ணியத்தை இழக்கும் போது அவர்கள் எமது சமூகத்துக்கு எந்த நலவைக் கொண்டு சென்றாலும் சமூகம் அதனை அங்கீகரிக்காது என்பதோடு நில்லாது அதனால் ஏற்படுகின்ற விளைவு முஸ்லிம் சமூகத்தைத் தான் மென் மேலும் சிக்கலுக்குள் கொண்டு செல்லும்.

எனவேதான் அதனை தெளிவாகப் புரிந்து கொண்ட ACJU தடால் படால்கள் இன்றி மிகவும் முதிர்ச்சியுடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. நாம் அறிந்த வரை அரசாங்கத்தின் ஒப்புதல் உடனேயே இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற் படுகிறார்கள் என்பதை ACJU வும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கக் கூடும். அரசாங்கத்துக்கு அடிபணிந்து, அதன் கைப் பிள்ளையாவது என்பது வேறு.


அரசாங்கத்தை பகைத்து பிரச்சினைப் படுத்திக் கொள்ளாது முஸ்லிம் சமூகத்தை இக்கட்டில் இருந்து விடுவித்து உரிமைகளை அடைய காய் நகர்திச் செல்வது என்பது வேறு. இதில் இரண்டாவதை தான் ACJU செய்து வருகிறது.

மிகவும் பொறுப்பும் கண்ணியமும் வாய்ந்த, ஆத்மீக ரீதியாக முஸ்லிம்களை வழி நடாத்திச் செல்கின்ற அமைப்பொன்று பயணிக்க வேண்டிய பாதை எதுவோ அதே பாதையை தான் ACJU வும் தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

எனவே மடத்தனமாக அரசாங்கம் வைக்கும் பொறிக்குள் போய் மாட்டிக் கொள்வதற்கு ACJU வில் உள்ளவர்கள் முட்டாள்கள் அல்ல. ஆகவே அசாத் சாலி, ACJU வும் தனது பாணியிலேயே போராட வேண்டும் என எதிர் பார்க்கக் கூடாது. அவர் ACJU வை ஊடகங்களில் அடிக்கடி விமர்சிப்பதை உடன் நிறுத்திவிட்டு தனது பாணியில் பயணிக்க வேண்டும்.JM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :