132 வருடங்கள் வழமை வாய்ந்த நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் பெட்டகம்.

(சுலைமான் றாபி) 

சுமார் 132 வருடங்கள் பழமை வாய்ந்த நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் பெட்டகம் இன்று (19.04.2013ம்  திகதி வெள்ளிக்கிழமை) பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. 04 அடி அகலமும் 06 அடி நீளமும் கொண்ட இரண்டு பெட்டகங்கள் ஹிஜ்ரி 1302ம் ஆண்டு நிந்தவூரின் தச்சு தொழிலாளர்களால் வடிவமைக்கப்பட்டவையாகும்.

தற்கால நவீன தொழில் நுட்ப வடிவமைப்புத்திரன்களை ஒத்ததாக காணப்படும் இப்பெட்டகங்கள் ஆரம்ப காலங்களில் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் முக்கிய ஆவணங்கள்  மற்றும் பள்ளிவாசலின் நிதிகளை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இந்தப்பெட்டகங்கள் முதுரை மற்றும் கருங்கல்லி மரங்களினால் வடிவமைக்கப்பட்டிருப்பது  அக்கால கலைஞர்களின்  கை வண்ணங்களுக்கு இன்னும் சான்று பகர்வதாக அமைகின்றது.

கவனிப்பாரற்ற  நிலையில் காணப்பட்ட இப்பெட்டகங்களை நன்றாக திருத்தம் செய்து பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படதாக நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம் றசீன் அவர்கள் தெரிவித்தார். இதேவேளை இன்றைய தினம்  ஜும்மா தொழுகைக்குப்பிறகு பொது மக்கள் அனைவரும் மிக வியப்புடன் அவதானித்தது நமது ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் பகிரப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :