உணவுப் பொருட்கள் தொடர்பில் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கும் வகையிலான 15 வர்த்தக விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.உணவுப்பொருட்கள் ஆ
லோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விளம்பரங்களில் உணவுப் பொருட்களில் இல்லாத போசனை சத்துக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பாவனையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் தவறான தகவல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment