தனது 13 வயது தோழியை பாலியல் வன்கொடுமை செய்ய 4 பேருக்கு உதவிய துரோகி.


ந்தியாவின், மும்பையில் 13 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தோழியே மயக்க மருந்து கொடுத்து, 4 பேர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த உதவி செய்திருக்கிறார்.

மும்பை, சாண்டாக்ராஸ் பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு அவர் அழைத்ததன் பேரில் இந்த சிறுமி சென்றுள்ளார். தோழியின் வீட்டில் ஏற்கனவே 4 ஆண்கள் இருந்ததை கண்ட சிறுமி, தனது தோழியிடம் விசாரித்ததில், அந்த நால்வரும் எனது தோழர்கள் என சிறுமியின் தோழி கூறியிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து, சிறுமிக்கு அவரது தோழி மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்து அவர் மயங்கிய பிறகு, அந்த வீட்டில் இருந்த நால்வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக பொலிசாரிடம் புகார் அளித்த சிறுமி, தனது தோழி மற்றும் நான்கு பேரின் பெயர்களையும் புகாரில் பதிவு செய்திருக்கிறார்.

புகாரின்பேரில் பொலிசார் குற்றம் சாற்றப்பட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :