வதந்தியும்,அதனால் ஏற்பட்டபீதியும் (கே.சி.எம்.அஸ்ஹர்)



அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,பொத்துவில் போன்ற பிரதேசங்களில் பரவிய ;ஒரு வதந்தியால் இப்பிரதேச பெற்றோர் பெரும் குழப்பமடைந்து தமது தொழில்களையெல்லாம் அப்படியே இடையில் விட்டுவிட்டு பாடசாலை சென்ற தம் பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச்செல்வதற்காக பாடசாலைகளை நோக்கிப்படையெடுத்தனர்.

இதனால் இப்பிரதேசத்திலுள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு முன்னால் ;பெரும் குழப்பநிலையும்,வாகனநெரிசலும் ஏற்பட்டது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு பாடசாலை மாணவர்களை பலாத்காரமாக பஸ்களில் ஏற்றிச்செல்கின்றனர்.   என்ற எவ்வித அடிப்படையுமற்ற வதந்திச்செய்தி பொய்யானது. இட்டுக்கட்டப்பட்டது;
எனக்கல்வி அதிகாரிகளும்,சமூகநலன்விரும்பிகளும்,பாடசாலை நிர்வாகமும் பெற்றோர்களுக்கு எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் தமது பிள்ளைகளை கூட்டிச்செல்வதிலேயே குறியாக நின்றனர்.

;;.அதன் பின் தமது பிள்ளைகளைக் ;கூட்டிச்சென்றுள்ளனர்
பாடசாலை மாணவர்கள் வெளியேறிச் சென்றபின்னரும்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் போன்றோர் பாடசாலை கலையும் நேரம்வரை காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.வதந்தியால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆராயாமல் .கிடைக்கும் வதந்திகளை நம்புவது எமது சமுதாயத்திற்குப் பெரிய பாதிப்புக்களையும்,நஷ்டத்தையும் ஏற்படுத்தும் ஆதாரமற்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி குழப்பங்களை ஏற்படுத்துவது ஒரு பெரும் பாவமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :