|
சித்திரைத் திருநாள் கவிதைப்போட்டி - 6
|
| உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு.. ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைத் திருநாள் கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம். ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம். கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள். 1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள்/ நிலமகள் நோகலாமா? 2. அமிலத்தில் ஆடிய அனிச்சம் 3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்/ பூணுகிறாள் புது நகையை 4 . தீராத தீவிரவாதம் 5 . உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு 6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள் 7 . ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும் 8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு 9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/ 10. காதலாகி…/ காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன்/ காதலைத் தீண்டும் சாதி நாகம் பரிசு விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 = 10000ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013 கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :poemcontest6@eegarai.com போட்டிக்கான விதிமுறைகள்: 1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது. 2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். 3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான எந்த கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும். 6. புதுக்கவிதையாகவும் இருக்கலாம். மரபுக்கவிதையாகவும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! |

0 comments :
Post a Comment