மாத்தறையில் மாணவிகள் மீது இனவெறி தாக்குதல் !!


மாத்தறை திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் மீது இனவெறித் தாக்குதலொன்று இடம்பெற்றதாக சமூக வலைத்தளத்தில் செய்தியொன்று உலவுகிறது.
அச்செய்தியின் விபரம்:
27-03-2013 மாலை 5.30 மணியளவில் திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலை வகுப்புக்கு தனியாக வந்துள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
பயத்தினால் பொலிஸுக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர்.
இது குறித்து எமது பிராந்திய செய்தியாளரிடம் விபரங்கள் கோரியிருக்கிறோம், அவை கிடைக்கப்பெறுமிடத்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.
sonakar.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :