கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியின் நினைவுப்படிவம்,பெயர்ப்பலகை உடைக்கப்பட்டுள்ளது.

TM- கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியின் நிர்மாண பணிக்கான ஆரம்ப நிகழ்வின்போது வைக்கப்பட்ட வீதியமைப்பு ஞாபகார்த்தப் படிகம் மற்றும் பெயர்ப்பலகை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளன. 

நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பெயர் பலகை மற்றும் ஞாபகார்த்த படிகம் ஆகியவற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன் மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களே உள்ளது. 

எனினும் கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே இனந்தெரியாதோரினால் இந்த ஞாபகார்த்தப் படிகம் மற்றும் பெயர்ப்பலகைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

ஜெய்க்கா திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ்இ 39 மில்லியன் ரூபா  செலவில் 1இ100 மீற்றர் நீளமான கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியின் நிர்மாணப்பணிக்கான  ஆரம்ப விழா நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதன் ஞாபகார்த்தப் படிகம் மற்றும் பெயர்ப்பலகைகள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் நேற்று திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :