மழை காலத்தில் குளமாகக் காட்சியளிக்கும் அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கு முன் உள்ள பாதை.


(எம்.எம்.முபாரக்)

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் செல்லும் புறத்தோட்டம் வீதி அகலமாக்கப்படாமல் குன்றும், குழியுமாகக் காணப்படுகின்றது. இப்பகுதி மக்கள் பலமுறை அட்டாளைச்சேனை பிரதேச சபை, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகின்றது.

மழை காலத்தில் இப்பாதை குளமாகக் காட்சியளிப்பதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். இனி மேலாவது பிரதேச சபை இப் பாதையை புணரமைக்க நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி உள்ளது. 

தற்போது பிரதேச சபையின் புதிய தவிசாளராக கடமையேற்றிருக்கும் எம்.ஏ.அன்ஸில் இப்பாதை விடயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்பதில் இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

கிழக்கு மாகாண அமைச்சர் பல கூட்டங்களில் இப்பாதையை அகலமாக்கி புணரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கூறியும் அவரும் பின்னர் இது விடயத்தில் இரட்டை வேடம் போட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த காலங்களில் இப்பிரதேச அரசியல் வாதிகள் இப் பாதை அகலமாக்கப்பட்டு புணரமைக்கப்படும் என்று பல தடவைகள் வாக்குறுதி வழங்கியும் இது வரை பாதை வேலைகள் நடைபெறவில்லை. புதிய தவிசாளர்  இந்த விடயத்தில் அக்கரை செலுத்தாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதிப்போம் என்று புறத்தோட்டம் மக்கள் சார்பாக ஏ.எல்.ஜெமீல் காட்டமாக தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :