சம்பளம் தராவிட்டால் தயாரிப்பாளரைக்கடத்துவேன் - நமீதா

ஜே.வி மீடியா ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் நாளைய இயக்குனர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த நிறுனம் தற்போது திரைப்பட தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறது. 

ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்த இதன் துவக்க விழாவில், இயக்குனர் கே.பாலச்சந்தர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். இயக்குனர்கள் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், இராம. நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஜே.வி.மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பாளர் கே.ஜே ஜெயவேல் பேசும்போது ஆண்டுக்கு இரண்டு படங்கள் தயாரிக்க இருப்பதாகவும், இந்த ஆண்டு ராஜ்குமார், நித்தினன் என்ற இரு இயக்குனர்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் நடிகை நமீதா பேசும்போது.... 

"நாளை இயக்குனர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடப்பதற்கு தயாரிப்பாளர் கே.ஜே.ஜெயவேல்தான் காரணம். அவர் இல்லாவிட்டால் நிகழ்ச்சியை நடத்த முடியாது. எனக்கு சம்பளத்தை கரெக்டாக கொடுத்து விடுவார்கள். 

அப்படி சம்பளம் தராவிட்டால் ஜெயவேலை கடத்திச் சென்று விடுவேன். அவர் இல்லாமல் நிகழ்ச்சி நடக்காதே அதனால் சம்பளத்தை கரெக்டாக கொடுத்து விடுவார்கள்" என்றார். 

இதனால் விழாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய நமீதா "பயப்படாதீங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். ஜெயவேல் ரொம் நல்லவர் சும்மா தமாசுக்கு சொன்னேன்" என்று பரபரப்புக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :