ரிஸானாவுக்காக அனுதாபப்படும் பலரும் அவளது குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருக்கின்றன. உங்களுக்கு என்ன வேண்டும்? எவ்வளவு பணம் வேண்டும்? வீடு கட்டித் தருகிறோம்.... பிள்ளைகளைப் படிப்பிக்க உதவி செய்கிறோம்.... வேலைவாய்ப்புத் தருகிறோம்....
ஆனால் அனைத்தையும் நிராகரித்துக் கொண்டிருக்கிறார் ரிஸானாவின் தாய். பிள்ளையின் பெயரால் நாங்கள் சொகுசாக வாழ விரும்பவில்லை. இந்தக் குடிசைக்குள்ளேயே ரிஸானாவின் நினைவுகளோடு செத்துப் போக விரும்புகிறேன் என்கிறார் அவர்.
ஆனாலும் மூதூர் பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி கேர்ணல் விகும் லியனகே உடனடியாகவே செயலில் இறங்கிவிட்டார். ரிஸானாவின் குடும்பத்திற்கென வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை அவர் தொடக்கி வைத்திருக்கிறார்.
ரிஸானாவின் குடிசையிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வளவில் வீட்டுக்கு அத்திவாரம் இடுவதற்கான வேலைகளில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. வீடு கட்டத் தேவையாக கற்கள், மண் என்பனவும் அங்கு கொட்டப்பட்டிருக்கின் றன. கூடியவிரைவில் வீட்டை நிர்மாணித்துத் தருவதாக அவர் உறுதியளித்திருக்கிறா ர்.
இதற்கிடையில் ஜனாதிபதி ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளதாகவும் சவூதி தனவந்தர் ஒருவர் வீடு கட்டப்போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்தவண்ணமிருக்க ின்றன. இவற்றில் எவை நடந்தேறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எம்.பி.எம்.பைறூஸ்
-வீரகேசரி
ஆனால் அனைத்தையும் நிராகரித்துக் கொண்டிருக்கிறார் ரிஸானாவின் தாய். பிள்ளையின் பெயரால் நாங்கள் சொகுசாக வாழ விரும்பவில்லை. இந்தக் குடிசைக்குள்ளேயே ரிஸானாவின் நினைவுகளோடு செத்துப் போக விரும்புகிறேன் என்கிறார் அவர்.
ஆனாலும் மூதூர் பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி கேர்ணல் விகும் லியனகே உடனடியாகவே செயலில் இறங்கிவிட்டார். ரிஸானாவின் குடும்பத்திற்கென வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை அவர் தொடக்கி வைத்திருக்கிறார்.
ரிஸானாவின் குடிசையிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வளவில் வீட்டுக்கு அத்திவாரம் இடுவதற்கான வேலைகளில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. வீடு கட்டத் தேவையாக கற்கள், மண் என்பனவும் அங்கு கொட்டப்பட்டிருக்கின்
இதற்கிடையில் ஜனாதிபதி ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளதாகவும் சவூதி தனவந்தர் ஒருவர் வீடு கட்டப்போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்தவண்ணமிருக்க
எம்.பி.எம்.பைறூஸ்
-வீரகேசரி

0 comments :
Post a Comment