றிசானா நபீக்கின் மறுமை வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக அனைவரும் பிரார்த்திப்போம் -முதல்வர் சிராஸ்
















(சௌஜீர் ஏ முகைடீன்)
றிசானா நபீக்கின் மறுமை வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக அனைவரும்
பிரார்த்திக்க வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது ஆழ்ந்த அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய றிசானா நபீக்கின் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய சரீஆ சட்டத்தின்படி கொலைக்கு கொலை தண்டனையாக இருந்தபோதிலும் மன்னிப்பளிப்பதை இஸ்லாம் விரும்புகின்றது. நபி (ஸல்) அவர்களின் சாச்சா ஹம்சா (றழி) அவர்களின் ஈரலை போர்க்களத்தில் கடித்துத் துப்பிய ஹிந்தா என்னும் பெண் மக்கா வெற்றியின்போது போர்க்கைதியாக பிடிக்கப்பட்டு நபியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அப்பெண்ணிற்கு மன்னிப்பளித்த சம்பவமானது கொலைக்கு கொலை என்பதைவிட மன்னிப்பைவிரும்புகின்ற ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது.

அக்கொலையினை றிசானா நபீக் செய்யவில்லை என்றும் மூச்சுத் திணறலுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முயன்றதாகவும் கூறியிருந்தார். எனவே இதனை ஒரு விதிப் பயன் என்று நினைத்து அக்குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் மன்னிப்பளித்து மறுமைக்கான ஈடேற்றத்தை பெற்றிருக்க முடியும்.

றிசானா நபீக்கிற்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனப் பூஞ்சோலை கிடைக்க அனைவரும் பிரார்த்திப்போமாக. அவரைப் பிரிந்த துயரத்தில் மூழ்கி இருக்கும் குடும்ப உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் ஈடேற்றத்திற்காக பிரார்த்தித்து மனம் சாந்தி அடையுமாறும் கேட்டுக்கொணடார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :