பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பாவனைக்காக ஆசிய மன்றத்தின் நிதியுதவியில் கல்முனை மாநகர முதல்வர் கணணி வழங்கி வைத்தார்



(சௌஜீர் ஏ முகைடீன்)

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பாவனைக்காக ஆசிய மன்றத்தின் நிதியுதவியில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் அனுசரணையில் கணணி ஒன்று இன்று (09.01.2013) காலை பதிவாளர் நாயகம் எம்.ஏ.ஜமால் முஹம்மதிடம் கையளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஆசிய மன்றம் செயற்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் உள்ளூராட்சி மன்றங்களின் முத்திரை வரி தொடர்பான விடயங்களை பேணுவதற்கும்இ அச்சேவையினை விரைபடுத்துவதற்குமாக குறித்த கணணி வழங்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையானது கடந்த இரண்டு வருடங்களில் 33 மில்லியன் ரூபாவினை முத்திரை வரி வருமானமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதன்போது  மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :