விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தவறினால் போராட்டம் தொடரும் எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் அப்துல் சத்தார்அறிவிப்பு


(தமிழகத்தில் இருந்து கனி)


எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார்அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்இ

தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்தவும்இ காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 45 ஆயிரம் ருபாய் நஷ்டயீடு வழங்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திஇ 

நேற்று  (09.01.2013)இ புதன்கிழமைஇ காலை  எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தமிழக தலைவர் மு.மு.ளு.ஆ.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் தஞ்சை இரயில் நிலையத்தில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சுமார் 500 க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி  தொண்டர்கள்  இரயிலை மறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும்இதமிழக விவசாயிகள் நிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாகவும் எஸ்.டி.பி.ஐ கட்சி இரயில் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

மத்திய அரசு- உச்சநீதிமன்றம்இநடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும்.

 தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்

டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 45இ000ஃ நஷ்ட ஈடாக மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்

மேலும் டெல்டா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு இதனை பேரிடராக அறிவித்து இதேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூபாய் 1000 கோடி வழங்க வேண்டும்
என்ற கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்துள்ளோம்.

மத்திய இமாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கான எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்புகிறோம்.அவ்வாறு நிறைவேற்ற தவறும் பட்சத்தில்இதஞ்சை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தவறும் பட்சத்தில்  அடுத்தடுத்த போராட்டங்களை  எஸ்.டி.பி.ஐ கட்சி  நடத்தும்.

விவசாயிகளின் நலனுக்காக எஸ்.டி.பி.ஐ கட்சி எப்போதும் துணை நிற்கும் என்பதனை தெரியப்படுத்தி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :