சாய்ந்தமருது அம்மார் பிரின்டர்ஸ் உரிமையாளர் முஹம்மட் றகீப் (வயது 29) ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார். திருமணமான இவருக்கு ஒரு பிள்ளை உள்ளது.
அவல்ல – வலக்கும்புர 42 1/2 கட்டை பகுதியில் இரவு 9.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
காரில் பயணித்த இவர் ரயில் கடவை ஒன்றில் காரை நிறுத்தி விட்டு ரயில் பாதையோரமாக நின்று தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை அவரது ஜனாஸாவை வைத்தியசாலையில் இருந்து விடுவித்து கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

0 comments :
Post a Comment