புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மோசடி விரோத குரல் அமைப்பு ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
மொஹான் பீரிஸ் ஆஜராகிய வழக்கொன்றில் அரசுக்கு 758 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2008 எப்.ஆர். 308 ரோயல் ரென்டுவ் நிறுவனத்திற்காக சட்டத்தரணியாக ஆஜராகி பின் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட பின் அரசுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை 26 லட்சம் வரை குறைத்ததாக மொஹான் பீரிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் மொஹான் பீரிஸ் குறித்து உடனடி விசாரணை நடாத்துமாறு வசந்த சமரசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
(அத தெரண)

0 comments :
Post a Comment