இனவாதத்தைத்தூண்டாதே கல்குடாவில் ஆர்ப்பாட்டம்


இனவாதத்தை தூண்டும் குழுக்களுக்கெதிரான எதிர்ப்புப்பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை 18.01.2013 ஜூம்ஆ தொழுகையின் பின் இடம் பெற்றது. இதில் பெருத்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மக்கள் அரசியலுக்காக இனவாதத்தைத்தூண்டாதே, இனவாதம் பேசி அரசியல் வளர் க்காதே, ஒற்றுமையாக உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் உறவில் தழிழ் கூட்டமைப்பு பிளவை ஏற்படுத்தாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கொண்டு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தை நோக்கி வந்து பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றினையும் சமர்பித்து அமைதியாக களைத்து சென்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட கிரான், வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் கிராமங்களை கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுடன் இணைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினைக் கண்டித்து இன்று வெள்ளிக் கிழமை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் கர்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அக்கர்த்தால் முறையாக அனுஸ்டிக்கப்படவில்லை.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :