சவூதி அரேபியாவில் தனது வீட்டுப் பணிப் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வசமாக மாட்டிக் கொண்ட ஆண் ஒருவர் மனைவிக்கு 13 ஆயிரம் டொலர்களை நஷ்டயீடாக செலுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதியோப்பியாவைச் சேர்ந்த குறித்த பணிப்பெண்ணுக்கு தனது தந்தை முத்தம் கொடுப்பதை கண்ட அவரது 6 வயது மகள் இது தொடர்பில் தனது தாயாரிடம்முறையிட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரிடன் நடத்தை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முற்பட்டுள்ளார். இருப்பினும் விரைந்து செயற்பட்ட அயலவர்கள் இது விடயத்தில் தலையிட்டு கணவனுக்கும் மனைவிக்குமிடையில் சமரசத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கமைய கணவரிடமிருந்து 13 ஆயிரம் டொலர்களை நஷ்டயீடாகத் தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். அயலவர்களும் குறித்த தொகையை அவரிடமிருந்து பெற்று மனைவியிடம் ஒப்படைத்துள்ளர். அதுமாத்திரமன்றி குறித்த எதியோப்பிய பெண்ணை திருப்பியனுப்பிவிட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரையே வீட்டுக்கு பணிப் பெண்ணாக எடுக்க வேண்டும் எனவும் மனைவி தனது கணவனுக்கு நிபந்தனை விதித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Home
/
LATEST NEWS
/
பணிப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வசமாக மாட்டியவர் 13 ஆயிரம் டொலர் மனைவிக்கு நஷ்டயீடு வழங்கினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment