டெல்லி மாணவி வழக்கில் புதிய திருப்பம்

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் கைதான குற்றவாளிகளில் இரண்டு பேர், அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக விருப்பம் தெரிவித்துள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைதான 6 குற்றவாளிகளில் 4 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. 

இதையடுத்து அவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி கிளர் முன்னிலையில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். 

அவர்களில் பவன் குப்தா, வினய் சர்மா என்ற இரு குற்றவாளிகள், தங்களுக்கு சட்ட உதவி வக்கீல் தேவையில்லை என்றும் அப்ரூவராக மாற விரும்புவதாகவும் தெரிவித்தனர். 

இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் ராம் சிங்கும் அவரது சகோதரர் முகேஷும் சட்ட உதவி வக்கீல் வேண்டும் எனக் கேட்டனர். 

வழக்கமாக வழக்கு விசாரணையில் ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில் குற்றவாளியை அப்ரூவராக மாறும்படி விசாரணை அதிகாரிகள் கேட்டுக் கொள்வர். இதனால் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்கவோ, அல்லது குறைந்த தண்டனை பெற முடியும். 

ஆனால் இந்த கொடூர பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் சாட்சிகளாக மாறுவதால் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

குற்றவாளிகளின் நீதிமன்ற காவலை 19ம் திகதி வரை நீட்டித்த நீதிபதி, குற்றப்பத்திரிக்கை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் இன்றும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

அதன் பின் நீதிபதி ஜோதி கூறியதாவது... 

இந்த வழக்கின் அனைத்து குற்றவாளிகளும் வக்கீலை நியமிக்காவிட்டால், சட்ட உதவியை நாடலாம் என தெரிவிக்கப்பட்டது. பவன் மற்றும் வினய் ஆகியோர் சட்ட உதவியை பெற மறுத்துவிட்டனர். 

அவர்கள் அரசு தரப்பு சாட்சியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். ராம் சிங் மற்றும் முகேஷ் சட்ட உதவியை நாடியுள்ளனர். அவர்களுக்கு சட்ட உதவி வக்கீல் நியமிக்கப்படுவர். 

இவ்வாறு நீதிபதி கூறினார். 

இந்த வழக்கின் 5வது குற்றவாளி அக்ஷய் தாக்கூரின் நீதிமன்ற காவல் 9ம் திகதி முடிகிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். 6வது குற்றவாளி மைனர் என்பதால், அவரது வழக்கை சிறுவர் நீதிமன்ற வாரியம் விசாரிக்கும். 

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றபத்தரிகையில் 5 குற்றவாளிகள் மீது கொலை, கொலை முயற்சி, கூட்டாக சேர்ந்து பலாத்காரம், கொள்ளை, ஆதாரத்தை அழித்தல் உட்பட பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :