முதல் முதலில் விஸ்வரூபம் பார்த்த முஸ்லீம் அமைப்புகள்!















கமல் தனது விஸ்வரூபம் படத்துக்கு ஒருபுறம் தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றொரு பக்கம் முஸ்லீம் அமைப்புகள் என்று நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், இந்த இரண்டில் ஒன்றை முதலில் சால்வ் பண்ணலாம் என்று முடிவு செய்து, ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்திருப்பதாக தெரியவருகிறது.

தியேட்டர் அதிபர்கள் சங்கத்துடன் ஃபுல் கான்ஸன்ட்ரேட் பண்ணுவதற்காக,  முஸ்லீம் அமைப்புகளை அப்ரோச் செய்து, பேசியதாக தெரிகிறது. முஸ்லீம் அமைப்புகளும் எங்களுக்கு படத்தை காட்டாமல் வெளியிடகூடாது என்பதில் உறுதியாக இருந்ததால், அவர்களுக்கு பிரத்யேகமாக படத்தை திரையிட்டு காட்டிவிட்டார் கமல்.

 (செவ்வாய்க்கிழமை) 10க்கும் மேற்பட்ட முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களுக்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றையும் ஏற்பாடு செய்த கமல், படத்தை திரையிட்டு காண்பித்தார் என்று தெரியவருகிறது.

படத்தை பார்த்த முஸ்லீம் தலைவர்கள் கேட்ட சிறிய கேள்விகளுக்கு கமல் தரப்பில் இருந்து சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில், முஸ்லிம் தலைவர்களும் படு திருப்தியாக கைகளை குலுக்கிவிட்டு சென்றுள்ளனராம்.

இப்போது அந்த விவகாரம் சால்வ் பண்ணப்பட்ட நிலையில், தியேட்டர் அதிபர்களுடன் முழுமூச்சாக டீல் பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்கிறது கமல் வட்டாரம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :