(எம்.ஐ.முஹம்மட் பைஷல், ஏ.எல்.றமீஸ்)
அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று (17) வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.சாக்கிர் ஹுசைன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதலாம் தர மாணவர்களையும், பிரதம அதிதியாக கலந்து கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.லாபீர் மற்றும் பாடசாலை அதிபர் உள்ளிட்டோரை இரண்டாம் தர மாணவ மாணவிகளால் பூத் தூவியும் மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
இதேவேளை ஜேர்மன் நாட்டிலிருந்து அரியானா தலைமையில் சஹ்றா வித்தியாத்துக்கு வருகை தந்த ஏழை கடந்த கோமாளிகள் கொண்ட குழுவினரை பாடசாலையின் அதிபர் பிரதம அதிதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின்னர் பிரதம அதிதி சிறுமி ஒருவருக்கு 'அ' என்ற தமிழின் முதல் எழுத்தை எழுதிக் காட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த ஏழை கடந்த கோமாளிகள் கொண்ட குழுவினர் முதலாம் தரம் மற்றும் ஏனைய மாணவர்களையும் மகிழ்விப்பதற்காக ஏமாளி தொடர்பான நாடகங்களை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பல கல்விமான்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment