கிழக்கு மாகாண மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கண்டறியும் முகமாக அமைச்சினால் நடமாடும் சேவை.



(எம்.பைஷல் இஸ்மாயில், ரீ.கே.றஹ்மத்துல்லா )

கிழக்கு மாகாண மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கண்டறியும் முகமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நடமாடும் சேவை நடாத்தப்பட்டுவருகின்றது.

இதற்கமைய தெஹியத்தகண்டி பிரதேச அமைப்பாளர் ஏ.எம். பிரியந்த அபேசேகரவின் வேண்டுதலின்பேரில் அமைச்சினால் நடாத்தப்பட்ட இரண்டாவது நடமாடும் சேவை நேற்று 06.01.2013 காலை 9.00 மணியளவில் தெஹியத்த கண்டி சாலிக்கா மண்டபத்தில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பையின்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாஹூதீன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ். ஜஹாங்கீர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் தத்தமது குறைகளையும் வேண்டுதல்களையும் முன்வைத்து அதிகமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அமைச்சரினால் வழங்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :