இனிமேல் பணிப்பெண்களை சவுதிக்கு அனுப்பக்கூடாது -BBC


சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளான இலங்கைப் பணிப்பெண்ணான ரிசான நஃபீக்குக்கு இலங்கையின் பல இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மூதூரில் உள்ள அவரது கிராமமும் இன்னமும் சோகத்திலேயே இருக்கின்றது. 

அவரது தாயார் ரிசானாவின் சடலத்தையாவது தனக்கு தாருங்கள் என்று இன்னமும் அழுதுகொண்டிருக்கிறார். 

எந்தக் குற்றமும் இழைக்காத தனது மகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டதாக அவர், அங்கு சென்ற பீபீசியின் செய்தியாளர் ஒருவரிடம் கூறியிருக்கிறார். 

இதற்கிடையே இலங்கையின் தலைநகர் கொழும்பில் ரிசானாவைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி ´´உரிமைகளுக்கான பெண்கள்´´ என்னும் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. 

சவுதியில் ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக்கூட இலங்கை வெளியுறவு அமைச்சு அறியாமல் இருந்திருக்கிறது, ஆகவே தாம் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அமைப்பைச் சேர்ந்த சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறினார். 

அத்துடன், இனிமேல் இலங்கை சவுதிக்கு பணிப்பெண்களை அனுப்பக் கூடாது என்றும் அவர் கூறுகிறார். 

இலங்கை பணிப்பெண்களுக்கு சவுதியில் பாதுகாப்பு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆகவே, ஏற்கனவே சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணிப்பெண்களையும் உடனடியாக இலங்கை அரசாங்கம் திரும்ப அழைக்க வேண்டும் என்றும் சரோஜா கூறினார். 

(பீபீசி) 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :