ரிசானாவை சிரச்சேதம் செய்த சவுதி அரசுக்கு பான் கீ மூன் கடும் கண்டனம்

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக், குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டி சவுதியில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 

ரிசானா நபீக் மீது குற்றம் சுமத்தப்பட்டமை மற்றும் அவர் மீது தடுத்து வைத்து நடவடிக்கை எடுத்தமைக்கு பான் கீ மூன் தனது கவலையை தெரிவித்துள்ளார். 

அத்துடன் சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாடு அதிகரித்துச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து ஆண், பெண்கள் அவர்களின் குடியேற்றம் தேசியநிலை என்பன கருத்திற் கொள்ளப்பட்டு சர்வதேச சட்டத்தின் கீழ் நியாயமாக நடாத்தப்பட வேண்டும் என பான் கீ மூன் கூறியுள்ளார். 

சவுதி அரேபியாவில் தற்போது பெண்களுக்கு நீதிமன்றங்களை சமமாக அணுகும் அல்லது நீதி பெற சமமான வாய்ப்பு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வெளிநாட்டில் இருந்து வரும் பெண் தொழிலாளர்களுக்கு சவுதியில் பாதுகாப்பு இல்லாததை இட்டு பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். 

(அத தெரண)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :