உதைபந்தாட்ட வீரரான சஊத் அல் பாலிஹ் ஷரீஆ சட்டத்திற்கமைவாக மரண தண்டனை

Share on
விபத்து ஒன்றின் மூலம் பங்களாதேஷைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்த சவூதி அரேபியாவின் உதைபந்தாட்ட வீரரான சஊத் அல் பாலிஹ் ஷரீஆ சட்டத்திற்கமைவாக மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
குறித்த பங்களாதேஷ் பணியாளரின் குடும்பத்துக்கு இரத்தப் பணமாக 3 இலட்சம் சவூதி ரியால்களை செலுத்தும்பட்சத்தில் மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும
் என நீதிமன்றம் அறிவித்திருந்ததுடன் சில வாரங்கள் காலக்கெடுவும் விதித்திருந்தது. இருந்தபோதிலும் குறித்த காலக்கெடுவுக்குள் அவரால் அந்நிதியைத் திரட்ட முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனது உறவினர்கள், நண்பர்களிடமிருந்து தன்னால் 120,000 ரியால்களை மாத்திரமே திரட்ட முடிந்ததாகவும் மீதிப் பணத்தை வழங்கி தனது உயிரைக் காப்பாற்ற உதவுமாறும் சஊத் அல் பாலிஹ் அந்நாட்டு இளைஞர் அதிகாரசபையின் தலைவர் இளவரசர் நவாப் பின் பைசலிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :