ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து 4ஆம் திகதி சுகயீன போராட்டம்

Share on

(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் 16ஆம் திகதி கல்வி அமைச்சுடன்
நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த காரணத்தினால் எதிர்வரும் 4ஆம் திகதி சுகயீன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த சுகயீனப் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்களும் கூட்டாகச் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை பின்வறுமாறு; 

'அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்ட, அதிபர் ஆசிரியர்களின் சம்பள திட்டத்திற்கு அமைவாக நிலுவையுடனான சம்பளத்தினை உடன் வழங்கு.அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கு, நிலுவைச் சம்பளம், இடர்கடன், வீடமைப்புக் கடன் முதலான அதிபர், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய், மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதத்தினை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இலசவ கல்விக்கான பாதுகாப்பினை உறுதிசெய், கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதை உடன் நிறுத்து, ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்து, போன்ற கோக்ரிக்கைகள் முன்வைத்தே இந்த சுகயீன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக' அவ்வறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :