Share on
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும் என கட்சியின் மாநாட்டில் இன்று முன்வைக்கப்பட்ட தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறிகொத்த வளாகத்தில் இருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த யோசனைக்கு சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் நடைபெறும் ஐதேக மாநாட்டில் பங்கேற்றுள்ள கட்சி உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலத்தை 6 வருடங்களாக நீடித்துக் கொள்ளும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

0 comments :
Post a Comment