எங்களை தூக்கில் போடுங்கள் என்று டெல்லி மாணவியை கற்பழித்து கொடூரமாக தாக்கிய குற்றவாளிகள் நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறினர்.
டெல்லியில் மருத்துவ மாணவியை ஓடும் பஸ்சில் கற்பழித்து, அவரை கொடுமையாக தாக்கி, அவரது ஆண் நன்பரையும் தாக்கி சாலையில் வீசிய ஆறு பேர் கொண்ட கொடூர கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்டுள்ள ராம்சிங் (33), முகேஷ்சிங் (31), அக் ஷய் சிங் (20), வினய் சர்மா (20), பவன் குப்தா (18) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் மீது டெல்லி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவர்களை தூக்கில் போடும்படி போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்கும் வகையில் சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு வாதாட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படலாம் என்று டெல்லி நீதிமன்றம் கூறிய போதும், இவர்கள் சார்பில் வழக்கை நடத்த கூடாது என்று வழக்கறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதனை அடுத்து இன்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் பவன்குப்தா, வினய்சர்மா இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள், அடையாள அணிவகுப்பில் இடம் பெற சம்மதம் கேட்ட போது, இருவரும், ´´ அடையாள அணி வகுப்பில் நிற்க எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் மிகக் கொடூரமான குற்றம் செய்துள்ளோம். இதற்காக எங்களை தூக்கில் போடுங்கள் என்று அழுது கொண்டே கூறினர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் ஜனவரி 6ஆம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு பவன் குமார் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment